search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமத்துவ பொங்கல்"

    • மகளிர் அணியினருக்கு சேலை வழங்கினார்.
    • கழக தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

    ஊட்டி

    ஊட்டி நகர தி.மு.க. சார்பில் தமிழர் தைத் திருநாளை முன்னிட்டு ஊட்டி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு சர்ட், சுவர் கடிகாரம், நாள் காட்டி, மகளிர் அணியினருக்கு சேலை, சுவர் கடிகாரம், நாள் காட்டி போன்றவைகளை ஊட்டி நகர தி.மு.க செயலாளர் எஸ்.ஜார்ஜ் வழங்கினார்.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.முஸ்தபா, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் எச்.மோகன் குமார், நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

    • நெற்குப்பை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடடப்பட்டது.
    • அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் மன்ற தலைவர் அ.புசலான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கணேசன் புகையில்லா பொங்கல் குறித்து பேசினார். நகர் பகுதிகளில் குப்பைகளை கொட்டவோ, எரிக்கவோ மாட்டோம், பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றுவோம், நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோம், மின்சார கழிவுகளை பிரித்து எடுத்து ஒப்படைப்போம், நீர் வரத்து கால்வாய் பகுதிகளில் கழிவுகளை கொட்ட மாட்டோம், பசுமை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் மரங்கள் நட்டு பராமரிப்போம், மண்வளத்தை காப்போம், நோய் தொற்று பரவாமல் இருக்க காய்ச்சிய நீரை பருகுவோம், துணி பைகளை பயன்படுத்துவோம், மழை நீரை சேகரிப்போம், குப்பைகள் இல்லா தூய்மையான பேரூராட்சியாக மாற்றுவோம் போன்ற உறுதிமொழிகளோடு புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • பெண்கள் பொங்கலிட்டு, கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • சுகாதாரம், சுற்றுச்சூழல், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் முன்னிலையில் நடைபெற்றது. பெண்கள் பொங்கலிட்டு, கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சுகாதாரம், சுற்றுச்சூழல், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. தூய்மை பணியாளர்கள் 50 நபர்களுக்கு புத்தாடைகள், பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ தனபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சமத்துவ பொங்கல் விழா இன்று சமத்துவபுரத்தில் நடைபெற்றது.
    • பொங்கல் பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைக்கும் விழாவை தொடங்கினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாளையம் புதூர் ஊராட்சி வெள்ளக்கல் பகுதி சமத்துவபுரத்தில் பொங்கல் விழா கலெக்டர் சாந்தி தலைமையில் கொண்டாடுவதற்காக சமத்துவ பொங்கல் விழா இன்று சமத்துவபுரத்தில் நடைபெற்றது.

    முன்னதாக நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி, ஷகிலா ஆகியோர் பொங்கல் பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைக்கும் விழாவை தொடங்கினர்.

    அதனை தொடர்ந்து பொங்கல் விழாவில் தருமபுரி கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு சமத்துவபுரத்தில் உள்ள மக்களோடு கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

    மேலும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான கோலப்போட்டி, லெமன் ஸ்பூன் மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    சமத்துவ பொங்கல் விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், அரசு அலுவலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமைஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சேவா சங்கத்தின் செயலாளர் குருசாமி பாண்டியன், சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, அருண்குமார், கவிதா, குருவம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    • கிராம மக்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பூதமங்க லம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்தது.

    பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்னகருப்பன் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.பொங்கல் திருநாளை முன்னிட்டு பூதமங்கலம் தூய்மை பணியாளர் களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி பருப்பு, முழு கரும்பு, சீருடைகள் வழங்கப்பட்டது. பணித்தள பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.

    இந்த விழாவில் பூதமங்க லம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பகதூர், தும்பைபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அயூப் கான், வஞ்சிநகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி, கச்சிராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம் ஆண்டிச்சாமி, அட்டப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன், பூதமங்கலம் ஊராட்சி செயலர் வடிவேலன், சமூக ஆர்வலர் தேவராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணித்தள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மேலூர் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, துணை தலைவர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலச்சந்தர், ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவாதவூர் இளவரசன், ஆட்டுக்குளம் சிவன் ராஜன், சூரக்குண்டு நிர்மலா ஸ்டீபன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலுார் மாவட்டத்தில் நாளை 121 கிராம ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது
    • பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சுகாதார சமத்துவ பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மேலும், கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஊராட்சிகளில் பணி யாற்றும் சுகாதார பணி யாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள்போன்ற ஊராட்சியின் அலுவலர் களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    சமத்துவ கருத்துகளை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்த்திடும் வகையிலும், பேச்சுப்போட்டி, கோல போட்டி உள்ளிட்டவை நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.




    • பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.
    • முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 1996- 97ல் படித்த மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர், அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.

    அவர்களுக்கு பாடம் எடுத்த முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    பின்னர் பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.

    அனைவரும் ஒன்று கூடி குழு போட்டோ எடுத்த பின்னர் பிரியாவிடை பெற்றனர். சரவணன், ஜலால் சலீம், செல்வம், தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின், பாம்பினோ சீனு உள்ளிட்டோர் இவ்விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

    • தென்காசி மாவட்டங்களில், உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டங்களில், உள்ளாட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி பெண் ஊழியர்கள் புது பானையில் புத்தரிசி, பனைவெல்லம் போட்டு பொங்கல் இட்டனர்.

    இதில் பொறியாளர் லாதா, இளநிலை பொறியாளர் ரவிச்சந்நிரன், சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேலு, தேர்தல் பிரிவு மாரியப்பன் , ஸ்டீபன், நகர் மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன் ராமகிருஷ்ணன், அனைத்து பணியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர்கள், பொதுமக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சமத்துவ பொங்கலை கொண்டாடும் வகையில் மாணவிகள் பாரம்பரிய சேலையிலும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் வந்திருந்தனர்.
    • தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசைக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில், எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு உண்டு. இந்த பண்டிகை ஜாதி, மாதங்களை கடந்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடுவார்கள்.

    இதில் இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்வார்கள்.

    வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறார்கள்.

    நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி 60 ஆண்டுகளை கடந்து பழமை கொண்டதாகும். இங்கு ஆண்டுதோறும் தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கல் மற்றும் சித்தர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

    இதில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதனை கல்லூரி முதல்வர் சாந்தமரியாள் தொடங்கி வைத்தார். கடந்த 2 நாட்களாக பாரம்பரிய போட்டிகளான பல்லாங்குழி உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கேரம்போர்டு, இறகுபந்து போட்டி, கைப்பந்து போட்டி, கைகளில் மெகந்தி வரைதல், மாறு வேடப்போட்டி, ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகளுக்கு காகித அலங்கார போட்டிகள் நடந்தது.

    இதில் ஒரு குழுவில் 3 பேர் வீதம் 12 குழுக்கள் இடம் பெற்றது. இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகள் காகிதங்களை கொண்டு விதவிதமான ஆடைகளை வடிவமைத்து அணிந்து வந்து போட்டியில் பங்கேற்றனர்.

    மேலும் காய்கனிகளில் கலைநயம் மிக்க பொருட்களை தயாரித்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது.

    இறுதி நாளான இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காக கல்லூரி முழுவதும் தோரணங்கள் கட்டி வண்ண கோலமிட்டு சிறப்பான வகையில் அலங்காரம் செய்யப்பட்டது. சமத்துவ பொங்கலை கொண்டாடும் வகையில் மாணவிகள் பாரம்பரிய சேலையிலும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் வந்திருந்தனர்.

    கல்லூரி பேராசிரியர்கள் பட்டு வேட்டி, பட்டு சேலைகள் அணிந்தபடி விழாவில் பங்கேற்றனர். இதையொட்டி மண்பானையில் மாணவிகள் பொங்கலிட்டனர்.

    அப்போது கூடியிருந்த சக மாணவிகள் பொங்கலோ பொங்கல் என்று தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி சமத்துவ பொங்கலை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

    பின்னர் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசைக்கப்பட்டது. அப்போது அதன் தாளத்திற்கு ஏற்ப மாணவ-மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். இதனால் கல்லூரி வளாகமே இன்று விழா கோலம் பூண்டுள்ளது.

    ×